பிரிவு

பிரிந்த பிறகும்

அவள் பிரியவில்லை

அவன்

மனசிலிருந்து இன்னும்.

+

எழுவதற்கு

நிறைய இருக்கிறது

அவளிடம்

கவிதையைத் தவிர.

ந க துறைவன்.

மௌனம்

1.

மௌனமாய் இயங்குகிறது

பிரபஞ்சம்

வெளிதான்

ஆர்ப்பரிக்கிறது

இரைச்சலாய் எந்நேரமும்…

2.

நான்

மனமற்று கம்பீரமாய்

மௌனம்

அனுஷ்டிக்கின்றன

அழகான பூக்கள்.

3.

இளநீர்க்குள்

நிரம்பி இருக்கிறது

தென்னையின்

ஆழ்ந்த மௌனம்.

4.

மொழி அற்ற

மொழியே

மௌனம்.

ந க துறைவன்.

உள் தாகம்

சில்லென்று குடிப்பதற்கு

குளிர்பானக் கடையில் கூட்டம்

வாங்கி பருகினாலும்

உள்தாகம் தணியாமல்

முகமெல்லாம்

வியர்வைத் துளிகள்

ந க துறைவன்.

இடைவெளி

எங்கும்

வெக்கையாக இருக்கிறது

மரங்களே

கொஞ்சம் வேகமாக

விசிறி விடுங்கள்.

2.

சமாளிப்புக்காக

சொல்லும் பொய்யே

அவர் யார்? என்பதை

உணர்த்தி விடுகிறது.

3.

டீ

கோப்பைகள்

இடையே

இருவருக்குமான

உரையாடல் இனிப்பாய்.

4

நிறைய தகவல்கள்

கிடைக்கின்றன

ஜோக்ஸ்

எழுதுபவர்களுக்கு.

ந க துறைவன்.