உமைவயம்

அறிந்தவன் மெஞ்ஞானியும் அல்ல

அறியாதவன் அஞ்ஞானியுமல்ல.
*
செப்பு தங்கமாக மாற்றுகிறான்
சித்தனின் சித்து ரசவாதம்.
*
மன்னிப்பவர்களும் இல்லை
மன்னிப்புக் கேட்பவர்களும் இல்லை.
*
கற்பிப்பது யார்?
கற்பது எது?
*
இருள் இருள்
இருவருக்குமான போர்வை.
*
சித்தமெல்லாம் சிவமயம்
மத்ததெல்லாம் உமைவயம்
*
தலைக் குனிந்திருக்கும் பூக்களுக்கு
எப்பொழுதும் வெட்கம்?
*
பூவே, அவள் கூந்தலில் சூடும் போது மட்டுமேன் உனக்கு கர்வம்?
*
பேச்செல்லாம் எதிர்மறை உச்சம்
நாக்கில் கருமச்சம்.
*
மனம் சும்மா இருந்தாலும்
எண்ணங்கள் விடுவதில்லை.

ந க துறைவன்.
*

ஏப்ரல்

முட்டாளும் அறிவாளியாக இருக்கிறான்

அறிவாளியும் முட்டாளாக இருக்கிறான்.

ஆகவே ஏப்ரல் முதல் தேதி

முட்டாள்கள் தினம்

அறிவித்தார்கள் போலும்

அனைவருக்கும்

அன்பான நல்வாழ்த்துகள்.

ந க துறைவன்.