செம்பருத்திப்பூ…!!

Haiku – Tamil / English.

*

செம்பருத்தி பூவின்

வசீகர அழகில் மயங்குகிறது

வண்ணத்துப்பூச்சிகள்.

*

Hibiscus flower

Enticements, beauty deceived

Butterflies.

N.G.Thuraivan.

இயற்கை விவசாயி பூங்கோதை.

 

 

இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு விவசாய உற்பத்தியில் சாதனைப் படைத்துள்ள பூங்கோதை தமிழ்நாட்டுப் பெண்மணி ” கிரிஷி கர்மான் விருது பெற்றுள்ளார். டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதாமர் மோடி, அந்த விருதை வழங்கினார். இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் கிடைத்துள்ளது.

“ பெண்களால் முடியாதது எதுவுமில்லை. விடாமுயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால் யாரும் சாதனை படைக்கலாம். நான் வீட்ல இருந்ததைவிட வயல்ல இருந்ததுதான் அதிகம். காலைல ஆறுமணிக்கு வயலுக்குப் போனா பொழுதுசாஞ்ச பிறகுதான் வீட்க்கு வருவேன். மக்காசோள உற்பத்தியில் சாதனை படைச்ச என் வயல்ல கடந்த ரெண்டு வருஷமா விளைச்சல் இல்லை. போன வருஷம் மழை அதிகமாக பெய்து பயிர்களை அழிச்சிடுச்சி. இந்த வருஷம் மழையும் இல்லை.கிணத்துலே தண்ணியும் இல்லை. அதனால பயிர் எல்லாம் கருகிப்போச்சு. அதுக்காக நான் இடிஞ்சி போயிடலை, விவசாயிங்க பாடுபட்டாதானே நகரத்துல இருக்கிறவங்க வீட்லயும் அடுப்பு எரியும்? இவ்ளோ நாளா என்னை வாழவைச்ச இயற்கை, இடையிலே கொஞ்சம் சோதிச்சுப் பார்க்குது. ஆனா என்னைக் கைவிடாதுங்கற  நம்பிக்கையில காத்துக்கிட்டு இருக்கேன் ” என்கிறார் விவசாயி பூங்கோதை

ஆதாரம் ; தி இந்து – ஞாயிறு நாளிதழ் – பெண் இன்று – 29-01-2017.

தகவல் ; ந.க.துறைவன்.

செய்திகள் என்ன சொல்லுது?

 

*

  1. உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான “ அமேசான் ” அதன் கனடா நாட்டுப் பிரிவு இந்தியாவின் தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள மூவர்ண நிறத்தில் கால்மிதியடிகளைத் தயாரித்தற்காகக் கடுமையாக எச்சரிக்கபட்டு, மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டது.

இந்தியாவில் யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனம் கூட பதஞ்சலியின் பெயரில் கால்மிதியடிகளைத் தயாரித்து விற்பனை செய்கின்றன என்கிறார்களே உண்மையா? அதற்கென்ன செய்யப் போகிறது இந்திய அரசு.

  1. கம்பளா போட்டிக்கு அவசர சட்டம். கர்நாடக முதல்வர் சித்தராமையா முடீவு.

மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களும் போராட்டக்களத்திற்கு விரைவில் இறங்குவார்கள் போல தெரிகின்றது.

  1. பேமெண்ட் வங்கி தொடங்க தபால்துறைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி.

ஆதித்யா பிர்லா நுவோ, பினோ பெடெக், எஸ்எஸ்டிஎல், ரிலையனஸ், வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு கொள்கை அளவிலான அனுமதி கிடைத்திரு்க்கிறது.

எல்லாமே தனியார்துறைக்கு தாராளமாக அனுமதிக்கபட்டுள்ளது.

தபால்துறையை இன்னும் கொஞ்சநாளில் ஊத்தி மூடிவிடுவார்கள் போல தெரிகிறது.

ஆதாரம்  jதி இந்து – நாளிதழ் – 29-01-2017.

தகவல் ; ந.க.துறைவன்.

செய்திகள் என்ன சொல்லுது?

1.
நாட்டின் பொருளாதாரம் சீராக ஒன்றரை ஆண்டுகள் ஆகும்
பொருளாதார நிபுணர் ஆனந்த் எஸ்.சீனிவாசன் கருத்து.

1. கறுப்பு பணம், கள்ளப் பணம் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று கூறி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தது மிகவும் தவறான முடிவு.
2. உலகின் எந்த நாட்டிலும் பணமில்லாத பரிவர்த்தனை 100% சதவீத அளவுக்கு நடப்பதில்லை. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 46 சதவீதம், பிரான்ஸ் 45%, ஜெர்மனி 86%, ஆஸ்திரேலியா 66% பணமில்லா பரிவர்த்தனை நடக்கிறது. இந்தியாவில் 100% பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வது சாத்தியமில்லை. ஏனென்றால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர்தான் இணையம் சேவையை பயன்படுத்துகின்றனர். உத்தரபிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் இன்னும் முழுஅளவில் மின்சார வசதியே கிடைக்கவில்லை.
3. ரிசர்வ் வங்கி போதிய அளவு பணம் அச்சடித்து வழங்கினால் தான், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு பிரச்சினை தீரும். பொருளாதார வளர்ச்சி சீராக இன்னும் 12 முதல் 18 மாதங்கள் ஆகும்.
மக்கள் பாடு இன்னும் ஒன்றரை வருடத்திற்கு துயரம் தான் போல தெரியுது. நாட்டு மக்கள் மீது மோடி திணித்து பணவன்முறை இது என்றே கூறலாம்.
2.
உச்ச நீதிமன்றத்தில் பிராணிகள் நல அமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு புதிய சட்டத்துக்கு எதிராக மீண்டும் வழக்கு.
மீண்டும் வேதாளம் முருக்கை மரத்தில் ஏறுகிறது. பிரச்சினை மேலும் வளர்கிறது. தீர்வுதான் என்ன???
3. 89 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு.
பெரும்பாலும் இந்த விருதைப் பெற்றுள்ளவர்கள். யார் எப்படிப்பட்டவர்கள் என்று யோசித்து பாருங்கள்.

ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 26-01-2017.
தகவல் ; ந.க.துறைவன்.

Tea Time – டீ டைம்…!!

Senryu – Tamil – English.

1.
அதிகாலை பனிப் பொழிவு
பாய்லர் எழுப்பிய புகை
தயாராகிறது புத்தம் தேனீர்
Early morning snow
Boiler smoke raised
Preparing tea brand
2.
அமைதியான விடியல் தருணம்
கொதிக்கிறது நுரைத்து
டீ தூள் மணம்.
A quiet moment in the dawn
Burning foam
Lavender tea powder. *
*
3.
பசும்பால் கொண்டு வந்தான்
டீ பருகி சென்றான்
கணக்கு எழுதி பால்காரன்.
Brought milk
Sipping tea and went
Milkman written account.
4.
உதட்டில் இனிப்பு
சூடான தேனீர் குடித்தவர்
மனதில் புத்துணர்ச்சி சிலிர்ப்பு.
Sweet lips
After drinking hot tea
Refreshing thrill in mind.
5.
ஓட்டுநரும் நடத்துநரும் இறங்கி
தேனீர் பருகிய பின் புறப்படுகிறது
ஊர் கடந்து முதல் பஸ்..
Drivers and conductors down
Departing after the tea tasted
The first bus passed the town ..

N.G Thuraivan.

பார்வையற்ற வழிகட்டி…!!

சூபி கதை.

ஞானத்தைத் தேடும் ஒருவர், லுக்மான் எனும் சூபி குருவிடம் கேட்டார்
“ நீங்கள் யாரிடம் ஞானத்தைப் பெற்றுக் கொண்டீர்கள்? ”
அவர் சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னார்
“ பார்வையற்ற ஒருவரிடமிருந்து. பார்வையற்ற எவரும் முன்கூட்டியே கவனிக்காமல் ஒரு அடி முன்னால் வைப்பதில்லை. அவர்கள் எங்கும் விழுவதில்லை. பெரும்பாலும், கண்ணுள்ளவர்கள் தான் விழுகிறார்கள். அதையறிந்த போது என் கவனம் அதிகரித்தது. வழியும் தெரிந்தது ”.

ஆதாரம் ; சூபி கதைகள் – தமிழில் : யூமா வாசுகி. பக்கம் – 31.
தகவல் ; ந.க.துறைவன்.