Tea Time / டீ டைம்.

நாலு டீ வாங்கினாள்

கட்டிக் கொடுத்தார்

இலவசமாக சர்க்கரை.

@

டீக்கடை வாசலில்

சுடச்சுட வேகிறது வாணாலில்

வாழைக்காய் பஜ்ஜி.

ந க துறைவன்.

Tea Time / டீ டைம்

11.

ஒவ்வொரு மனிதனின்

ருசி உணர்வின் வெளிப்பாடு

லைட் ஸ்டாங்க் டீ.

12.

அனைத்தும் ஏற்றி முடித்தனர்

களைப்பு நீங்க டீ குடித்தனர்

புறப்பட்டது தேங்காய் லாரி.

13.

செடிகளுக்கு உரம்

தூக்கி சென்றாள்

டீத்தூள் கழிவு வாளி.

14.

கடன் கேட்டதால் தகராறு

கெடு விதித்து மீண்டும்

வாங்கிக் குடித்தார் டீ.

15.

டீக்கடை வாசலில்

காத்திருக்கிறது நாளெல்லாம்

பொறைக்காக நாய்.

ந க துறைவன் வேலூர்

Tea Time/ டீ டைம்.

6

டீ கடைகளில் வாழ்கின்றன

மக்கள் ஒற்றுமை பலம்

இந்தியா கிராமங்களின் ஆன்மா.

7.

பஸ் வரும் நேரம் கேட்டறிந்தார்

ஊர் போய் சேர்வதற்கு

டீ குடித்த வெளியூர்க்காரர்.

8.

மூன்று டீ சொன்னார்

நின்று கொண்டே பேசினார்கள்

காதல் தகராறு.

9.

அப்பா சொல் கேட்கும் மகன்

விரும்பி குடிக்கிறான்ச

சைனா டீ.

10. டீக்கடைக்குள் வந்து நுழைந்தவரால்

சட்டென நிறுத்திக் கொண்டனர்

ரகசியப் பேச்சு.

ந க துறைவன் வேலூர்.

சென்ரியு கவிதைகள்.