மேக்னடிக் ஹில்

காந்த மலை மேக்னடிக் ஹில் பல்வேறு விதமான மலைகளையும், பாறைகளையும் பற்றி நாம் சிறு வயதில் படித்து இருப்போம். ஆனால் காந்த மலையை பற்றி படித்திருக்கிறோமா? அதிசயப் படாதீர்கள். உண்மையிலேயே காந்த மலை என்று ஒரு மலை உள்ளது. இதனை மேக்னடிக் ஹில் என்று அழைப்பார்கள். உங்கள் காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம். ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகளின் காரணமாக வாகனங்களை மலையின் மேலே இழுக்குமாம். எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் நீங்கள் உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம். இந்த மேக்னடிக் ஹில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மாவட்ட தலைநகர் அருகே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மேக்னடிக் ஹில் கார் பயணம் செய்பவர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

***