நிஜம்…!!

Haiku – Tamil / English;

*

எது நிஜம் எது பொய்?

எவருக்கும் தெரியாது?

எல்லாமே நிஜம்..

*

What is true and what is false?

Who knows?

Everything is real ..

N.G.Thuraivan.

*

சோகத்தை அறியுமோ மழை…?

கட்டுரை.

*

புயல் மழை வருவதை முன்னறியும் ஆற்றல் பறவைகள் விலங்குகளுக்கு உண்டு என்று சான்றோர்கள் சொல்கிறார்கள். இன்றும் ஆதிவாசி பழங்குடிமக்கள் வானிலையை அறி்ந்து மழை வருவதைச் முன்கூடடியே சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அக்காலத்திலும் இக்காலத்திலும்  ஜோதிடர்கள் பஞ்சாங்கம் பார்த்து அப்படி சொல்வதை அறிவேன். நவீன விஞ்ஞான வளர்ச்சியடைந்த இந்நாளில் வானிலை ஆராய்ச்சி மையம் மிகத் துள்ளியமாக உடனுக்குடன் தகவல்களை அனுப்பி மக்களை எச்சரிக்கை செய்கின்ற அளவிற்கு வளர்ந்திருக்கின்றன.

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பெய்து வரும் புயல்மழை வெள்ளப் பெருக்கு மக்கள் வாழ்வாதாரத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. எங்கும் மழைவெள்ள நீர் பெருகிப் பாய்கிறது. அணைகள், அருவிகள், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்ப்பட்டுள்ளன. விவசாயம் விவசாயிகள் வாழ்விழந்து தவிக்கின்றார்கள்.  அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மையால் பாதுகாப்பின்றி அவதிக்குள்ளாகி உள்ளார்கள். அவர்களுக்கான நிவாரண உதவிகள் மிகத் தாமதமாகி விட்டன என்று புகார் தெரி்க்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒடிசாவில் ஏற்பட்ட புயல் மழைக்கு அம்மாநில முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்றளவும் உலக அளவில் பாராட்டப்படுகின்றன. அந்நிகழ்விலிருந்து இன்னும் பல மாநிலங்கள் தக்கதொரு படப்பினைப் பெறவில்லை என்று சமூக ஆர்வலர்கள் விமர்சகர்கள் காட்டமாகத் தெரிவிக்கிறார்கள். இந்தியா மாநிலங்களில் தமிழகம் என்னதான் வளர்ச்சிப் பெற்ற மாநிலமாக இருந்தாலும் அரசியல்ரீதியாக மக்கள் பிரச்சினைகள்பால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைள் பாரபட்சமானதாகவே இருக்கின்றன என்று அரசியல்வாதிகள் முதல் பொருளாதார வல்லுநர்கள் வரை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இன்று தமிழக மக்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது   நிதர்சனமான உண்மையென்று சொன்னால் மிகையாகாது.

ந.க.துறைவன்

*

அறுவை சிகிச்சை…!!

 

*

முல்லா ஒரு முறை அறுவை சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.. அவருக்கு அறவை சிகிச்சை செய்யும் மருத்துவர் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டார்.

“ இங்கே பாருங்க முல்லா! நாங்கள் வேகத்தை நம்புகிறோம். ஒரு நொடிப்பொழுதைக்கூட வீணாக்க மாட்டோம். அறுவை சிகிக்சை முடிந்த அடுத்த நாளே நீ்ங்கள் உங்கள் அறையில் ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும். அடுத்த நாள் மருத்துவமனைக்கு வெளியே அரைமணி நேரம் நடக்க வேண்டும். மூன்றாவது நாள் ஒரு மணிநேரம் தெருவில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இங்கே நேரம் தான் பணம். நமக்கு இருப்பதோ குறுகிய வாழ்நாள். அதனால் பணத்தையும் நேரத்தையும் எவ்வளவு முடியுமோ? அவ்வளவு மிச்சப்படுத்த வேண்டும். என்ன புரிந்ததா? ஏதாவது சந்தேகம் இருக்கிறதா? ”

“ ஓரே ஒரு சந்தேகம் டாக்டர். அறுவை சிகிச்சை செய்யும் போதாவது நான் படுத்துக் கொள்ளலாம் அல்லவா? ”

ஆதாரம் ; ஓஷோவின் “ பாதை சரியா இருந்தால்…. – என்ற நூல் – பக்கம் – 400.

தகவல் ; ந.க.துறைவன்.

*

அழுக்கு…!!

அழுக்கு…!!

*

மற்றவர்கள்

செய்தத் தவறுகளை

நாம் எப்பொழுதும்

மன்னிப்பதில்லை

ஏனெனில் நாமே

தவறு செய்பவர்களாக

இருக்கிறோம்

சில நேரங்களில்…

*

நிர்வாண

மனிதர் அணிந்த

அழுக்குத் துணிமூட்டை

சுமந்து

நிர்வாணக் கழுதை

துறைக்குப்போகிறது

எந்த அழுக்கை

வெளுக்க…?

*

தீபத் திருநாள்…!!

கார்த்திகைத் தீபம்…!!

*

மலையில் ஒளிரும்

திரு விளக்கு

நெய்யில் எரியும்

ஆன்ம விளக்கு

மண் இருள் போக்கும்

ஒளி விளக்கு

கார்த்திகைத் தீபத்

திரு விளக்கு.

ந.க.துறைவன்

 

மழைக் காலம்…!!

Haiku – Tamil / English;.

*

மழைக் காலம்

The rainy season

*

வெளியில் போகமுடியவில்லை

புயல் மழையில் சேதமாகி விட்டது

எறும்புகள் சேகரித்த தானியங்கள்.

 

*

Unable to go outside

The storm has been deteriorating in the rain

Grains collected by the ants.

N.G.Thuraivan.

*