அழகிய பெண்…!!

முல்லா கதை.

*

ஒரு அழகானப் பெண் கடந்து செல்லும் போது முல்லா நஸ்ருதீன் பார்ப்பதற்கு திரும்பினார். அவரது மனைவி தனது உதட்டைப் பிதுக்கி கொண்டு, “ ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு அழகான பெண்ணைப் பார்க்கும்போதும், நீங்கள் திருமணமானவர் என்பதை மறந்து விடுகிறீர்கள் ” என்று கூறினாள்.ள

அதற்கு முல்லா, “ அங்குதான் நீ தவறு செய்கிறாய். அந்த உண்மை குறித்து எதுவும் எனக்கு விழிப்புணர்வைக் கொடுப்பதில்லை ” என்றார்.

ஆதாரம் : ஓஷோவின் – திடீர் இடியோசை – நூல் – பக்கம் 197.

தகவல் : ந.க.துறைவன்.

*

கவிஞன்…!!

போலந்து கவிஞரான டேட்யூஸ் ரோஸ்விக்ஸின் ஒரு கவிதை.

*

கவிஞன் என்பவன் யார்?

கவிஞன் என்பவன் கவிதை எழுதுகிறவன்

கவிஞன் என்பவன் கவிதை எழுதாமல் இருக்கிறவன்.

கவிஞன் என்பவன் தளைகளைத் தகர்ப்பவன்

கவிஞன் என்பவன் தளைகளைப் பூணுகிறவன்

கவிஞன் என்பவன் நம்புகிறவன்

கவிஞன் என்பவன் நம்ப முடியாமல் போகிறவன்

கவிஞன் என்பவன் பொய் சொன்னவன்

கவிஞன் என்பவன் பொய்களைப் பெற்றுக் கொண்டவன்.

வீழ முனைபவன்

தன்னைத்தானே உயர்த்திக் கொள்கிறவன்

கவிஞன் என்பவன் விலகிப்போக முயல்பவன்

கவிஞன் என்பவன் விலகவே இயலாதவனும் கூட.

*

ஆதாரம் ; காலச்சுவடு – பிப்ரவரி – 2016 – பக்கம் 69.

தகவல் : ந.க.துறைவன்.

*

பதிலென்ன?

 

*

துரோகம் இழத்தவர்கள் என்று தெரிந்தும் அவர்களின் எதிர்மறைச் செயல்களை மறந்து, பகைமைப் பாராட்டாது, தோழமைக் கொண்டு வாழ்கின்ற ஒரு மனிதனைப் பற்றி, உங்கள் கருத்தென்ன? என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேள்விக் கேட்டார். அதற்கான பதில் என்னால் சொல்ல இயலவில்லை. இருப்பினும், அந்த நண்பர் எவ்வளவு குருரமாக மனம் புண்பட்டிருக்கிறார் என்பது அப்பொழுது தான் புரிந்துக் கொள்ள முடிந்தது. உங்களுக்குப் புரிந்தால் தக்க பதில்  சொல்லுங்க…!

ந.க.துறைவன்

*

முதல் மலர்…!!

Haiku – Tamil / English.

*

இனிய காலைப்பொழுது குளிரில்

விழித்த முதல் மலர் எதுவென்று

நம்மால் காண முடியுமா?

*

Cool off in the morning

What woke up the first flower

Can you see?

N.G.Thuraivan.

என் பெயர் ரோஹித் வெமூலா.

 

*

ஒரு விபத்து

என் பிறப்பு

பின் எனது இருப்பில்

எங்கிருந்து இத்தனை வெறுப்பு?

சாதி சதி செய்தது

மதம் அப்படித்தான் என்றது.

பொருளாதாரம் சுரண்டியது

கல்வி குருடாய் இருக்கச் சொன்னது

இயற்கை தன்னை .இழந்து தவித்தது

கடவுள் காணக்கிடைக்கவில்லை

அனைத்தும் சந்தை என்றான பின்

அன்பும் சந்தைக்குச் சென்றது

விலைபோகாத அன்பு

அநாதையாய் நின்றது

மனிதம் அகதியாய் ஓடியது

மனம் ஏங்கித் தவித்தது

அன்பை விதைத்தது

அன்பை வளர்த்தது

அன்பைப் பறிமாறி

அன்பின்றி ஏதுமில்லையென

நட்பும் இலக்கியமும் மட்டுமே

கடைசிப் புகலிடமாய் காட்சியளித்தது

எனக்குள் உண்டான

வெறுமைக்கு விடைகண்டு

“ ஜெய்பீம் ” என்றேன்

அரசியல் சுருக்கால் இறுக்கியது

என் பெயர் ரோஹித் வெமூலா.

*

நன்றி :ஆதாரம் : உயிர்மை – பிப்ரவரி – 2016 இதழ் – பக்கம் 17.

தகவல் : ந.க.துறைவன்.

*ித

வெற்றி…!!

சிந்தனைத் துளிகள்.

1.

வாழ்வின் நிகழ்வுகளைக் குறைசொல்வதில் அர்த்தமில்லை. நல்லதும் கெட்டதுமான செயல்களை அது அறியாது. அதுபாட்டிற்கு நேரங்களை நகர்த்திக் கொண்டே செல்கிறது. வாழ்வை புரிந்துக் கொண்டு  தாம் அதை இனம் பிரித்து அனுசரித்துப் போய் வாழ்வதில் தான் வெற்றியே அமைந்திருக்கிறது.

2.

எதிர்ப்பாராமல் வருகின்ற பிரச்சினைகளை எதிர்க்கொண்டுச் சமாளித்து.  அதனைத் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என்று நினைத்து ஆறுதல் அடைவதே மனநிம்மதியைத் தருகின்ற செயலாகும்.

ந.க.துறைவன்

*

ஞானம்…!!

 

*

மூங்கில் காட்டை அழித்து

ஒரு புல்லாங்குழல் செய்தேன்

அப்பொழுதுதான் தெரிந்தது

அது ஊமையென…

ஆதாரம் : ஓஷோ டைம்ஸ் – தமிழ் இதழ் – செப்டம்பர் – 2001.- பக்கம் 11

தகவல் : ந.க.துறைவன்.

*