மண்புழு

வெயில் தாக்கம்
நம்மால்
தாங்க முடியவில்லையே?
எப்படிதான் தாங்கி
ஊர்ந்து வாழ்கிறதோ
அந்த மண்புழு.

ந க துறைவன்

அனல்

அனல் வெயில்

மரத்திலொரு

அணில் கூட

விளையாடுவதைப்

பார்க்க முடியவில்லை

மரத்தில் மறைந்தது

என் மனம்.

ந க துறைவன்.

எண்ணங்கள்

அவன் என்னவாக

இருக்கிறானோ,

அதைப் போன்று அவன்

எண்ணங்கள் இருப்பதில்லை.

+

ஒவ்வொருவரின்

செயல்பாடுகளுக்கும்

எண்ணங்களுக்கு

இடையே

நிரம்பவே இடைவெளி /

மனவெளி இருக்கிறது.

ந க துறைவன்.

செய்தி

இந்த ஆண்டு மொத்த வங்கி மோசடி ரூபாய்.19,194 கோடி.

மூன்றே மாதங்களில் 2017-ம் ஆண்டை மிஞ்சியது.

தி இந்து – 24/03/2018.

நிலமை இப்படியே போனால் வங்கிகள் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?

ந க துறைவன்.