ஒன்றுமில்லை…!!

 

 

குளிர்க் காற்றின் மென்மையில்

காலை நடைபயிற்சியில் இருக்கும்போது

எதிரே வந்த நெருங்கிய நண்பர்

என்னிடம் பேச்சுக் கொடுத்து

நலம் விசாரித்தார் கவனமாய்

பரிமாற்றலுக்குப் பிறகு

மீண்டும் வேறேன்ன செய்தி என்றேன்.

ஓன்றுமில்லை என்றார்

ஒன்றுமில்லை என்று சொன்னவர்

அரைமணி நேரம் தன் சோகச்

சுமைகளைக் கொட்டித் தீர்த்தார்.

ஒன்றுமில்லை என்பதில் தான்

எத்தனை உருவகங்கள் அவர்

உள்மனதில்

புதைந்திருக்கிறதெனப் புரிந்தது.

வெங்காயத்தின்

உள்ளே ஒன்றுமில்லை தான்

அதன் மேலே அடர்த்தியாக

அடுக்கியிருக்கிறது ஒவ்வொன்றாகக்

காய்ந்த சருகுகள்.

ந.க.துறைவன்.

*

செய்திகள் என்ன சொல்லுது?

 

 

1.

இரவில் மலர்ந்து காலையில் வாடும் ‘ நிஷா காந்தி ‘ மலர் பூத்து குலுங்குகிறது.

நள்ளிரவில் மட்டுமே பூக்கும் “ நிஷா காந்தி ” பூக்கள் தற்போது நாகர்கோவில் ராமன்புதூரில் உள்ள ஆலன் ஜோ என்பவரது இல்லத்தில் பூத்துள்ளது.  நிஷா காந்தி பூக்கள் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே மலர்ந்திருக்கும். இந்த பூக்கள் இரவில் பூப்பதால் “ இரவு ராணி ‘  என்றும் அழைக்கப்படுகின்றன.

குறிஞ்சி மலரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால்,  இரவில் மலர்ந்து காலையில் வாடும் இம்மலர் பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகிறோம் அல்லவா! எப்பொழுதும் மலர் இனங்கள் அதிசயமானவையே. மலர்க. நிஷா மலர்க…!!

 

எல்ஐசி  ; 60 ஆண்டு ஆச்சரியம்.. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனது 60-வது வயதை நிறைவு செய்து வைர விழாவைக் கொண்டாடுகிறது.

.இந்தியாவில் ஒரு வலுவான பொதுத் துறை நிறுவனம் எல்ஐசி. இந்திய பொருளாதாரத்தின் ஒரு மையப் புள்ளியாகத் திகழ்வது. அதன் வளர்ச்சியைப் பாராட்டி வாழ்த்துவோம்.

ரயில்வே தறையை தனியார்மயமாக்க முயற்சி

இன்னும் கொஞ்ச நாள்லே இந்தியாவையே தனியாருக்கு வித்திட்டுப் போயிடுவாங்க போல இகுக்கு.

ந.க.து்றைவன்.

 

மனதிற்கிசைவாய்…!!

 

 

தொடங்கிய வேலைகள் இன்னும்

முடிவுபெறாமல் அப்படியே இருக்கிறது.

அதற்கடுத்ததாய் காத்திருக்கும் வேலைகள்

எப்பொழுது தொடங்குவதென

வழியறியாமல் திகைக்கிறது மனம்

திட்டமிட்ட வேலைககள் முடிக்கவே

இயலாத சுமையின் பாரம் தாங்காமல்

தவிக்கையில் சட்டென எதிர்பாராமல்

நிறைவேறி விட்டது எந்தவொரு

வில்லங்கமுமில்லாமல் திட்டமிடாத

சிலவேலைகள் மனதிற்கிசைவாய்…!!

ந.க.துறைவன்

*

செய்திகள் என்ன சொல்லுது?

 

 

1.

இந்தியாவில் கடந்த ஆண்டில் கர்ப்ப கால மற்றும் பிரசவ காலத்தில் இறந்த

பெண்களின் எண்ணிக்கை 45,000. இதில் இந்தியாதான் முதலிடம்.

முழக்கங்கள் தான் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறதே தவிர சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம் என்பதற்கு இதுவே சிறந்ந உதாரணம்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை நிகழ்ந்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 377. இதில் உயிரிழப்பு 143. காயமடைந்தவர்கள் 353. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

குடிபோதை தான் இதற்கு முதன்மையான காரணம் என்று சாலை விபத்துக்கான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் புதுமைப்பித்தன் வாழ்ந்த சாலைத் தெருவுக்கு “ புதுமைப்பித்தன் வீதி ” என்று பெயர் சூட்டியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.

படைப்பாளர்களுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்.

தகவல் தொகுப்பு ; ந.க.துறைவன்.

*

ஓஷோவின் சிந்தனைகள்…!!

 

 

1.

தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளும் மனிதன் அடுத்தவர்களையும் துன்புறுத்தத்தான் செய்வான்.

2.

ஒரு செயல் தவறானதை நீங்கள் மாற்றும்போது, மற்றொரு தவறான செயல் உங்களால் ஏற்பட்டு விடுகிறது.

3.

பகுத்தறிவாளன் எப்பொழுதும் சம்பிரதாயங்களில் அடைபடுவதில்லை. வெறும் மூடர்கள் தான் அதில் கட்டுண்டு விடுகிறார்கள்.

ஆதாரம் ; ஓஷோவின் “ விளக்கின் கீழே விதை. – நூல்ஃ

தொகுப்பு ‘ ந.க. துறைவன்.

*

உயிர் பறிக்கும் மின்வயர்…!!

 

*

மின்சார வயரைக் கடித்து

தற்கொலை செய்துக் கொள்ளும்

புதியதொரு உத்தியை

அறிமுகமாக்கியுள்ளார்கள்

உங்கள் வீட்டில்

அவளோ / அவளோ இருந்தால்

பத்திரமான பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அவர்கள் மனப்போக்கை அறிந்து

சற்றே விட்டுக் கொடுத்து

பழகி பாசமாயிருங்கள்.

எதற்கெடுத்தாலும் அவர்கள் மீது

குற்றப் பத்திரிகை வாசிக்காதீர்கள்.

அவளோ / அவனோ எதற்கேனும்

கோபித்து முரண்டு பிடிக்க

இடம் தராதீர்கள்.

அவர்களி்ல் எவரேனும் தற்கொலைக்கு

முயற்சிக்கலாம் உங்களுக்கே தெரியாமல்

வீட்டில் எட்டாத உயரத்தில்

இருக்கும் அறுந்த மின்சாரவயர்களை

உடனே பழுது பாருங்கள்

குடும்பபப் பிரச்னையில் ஏடாகூடமாக

ஏதேனும் நடக்க வாய்ப்பில்லாமல்

உயிர்களைப் பாதுகாக்கலாம்.

ந.க.துறைவன்.